புது டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி, “நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று
Category: ட்ரெண்டிங்
விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்! உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரை தாக்க முயன்றவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்டச் செயலாளர் சீ.ம. ரமேஷ்கர்ணா தலைமையில் முத்துகடை பேருந்து நிலையத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர். கவாய் அவர்களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ் கிஷோர் மீது
தஷ்வந்த் மரண தண்டனை ரத்து – உடனடி விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சென்னை: போரூர் அருகே 6 வயது சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று முகலிவாக்கம் பகுதியில் வசித்த ஹாசினி காணாமல் போனார். மூன்று நாட்களுக்கு பிறகு, போலீசார் அந்த சிறுமியின் எரிந்த உடலை ஒரு பயணப் பையில் அடைத்து
தப்பி ஓடிய நபருக்கு எலும்பு முறிவு. காவல்துறை விளக்கம்.
செங்கல்பட்டு: நந்திவரம் கூடுவாஞ்சேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மின்வாரிய ஊழியரை அருவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட ரவுடிக் கும்பலை போலீசார் பத்து மணி நேரத்திலேயே பிடித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அம்பேத்கார் நகரில் பைக் ரேஸ் நடந்ததை மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் தட்டி கேட்டிருந்தார். இதனை பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், போலீசார் ஏழு பேரையும் கைது
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம்
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம் தில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சனாதனத்தை அவமதித்தார் என குற்றம்சாட்டி, அவரை செருப்பால் தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு முரணான நடத்தை மற்றும் வழக்கறிஞர்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்டதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காஜூராகோ கோவிலில் விஷ்ணு சிலையின்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயு.சந்திரகலா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது . தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்
துணிப் பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

