உத்தரப் பிரதேசம், கைரிகாட்: கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. அந்த சமயத்தில் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட தாய் தண்ணீரில் குதித்து தைரியமாக போராடி, மகனை உயிருடன் காப்பாற்றியுள்ளார். கையில் இருந்த கம்பியால் முதலையின் தாடையை அடித்த தாயின் வீரச் செயலில், முதலை சிறுவனை விடுவித்து தண்ணீருக்குள் சென்று மறைந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. “தாயின் தைரியத்துக்கு
Category: சமீபத்திய செய்திகள்
வழக்கறிஞர் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல் சென்னை: நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், Naam Tamilar Katchi ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீமான் வெளியிட்ட பேச்சு தொடர்பாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் புகார் அளித்திருந்தார். எனினும், அந்த புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் சென்னை
பிரசவத்தில் உதவி செய்த பெண் காவலருக்கு தலைமை இயக்குநர் பாராட்டு
சென்னை: பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்கச் செய்த பெண் காவலருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் பாராட்டு தெரிவித்தார். கடந்த 16ம் தேதி அதிகாலை 00.25 மணியளவில் திருப்பூர் நகரில் வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் (எண்-1065) கோகிலா, பயணிகள் ஆட்டோவில் தனது கணவருடன்
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை உயர்வு – 2018ஐ விட 2024ல் 1.50 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு சென்னை: மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் பிறப்பு–இறப்பு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டு மாநிலத்தில் 5,45,255 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் இது 6,95,680 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2018ஐ விட
பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!
திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி! வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சியில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் ஆகஸ்ட் 23 ,24 நாட்களில் சனிக்கிழமை
தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி!
பெங்களூருவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! பெங்களூரு, ஆகஸ்ட் – தவணாகெரே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அந்தச் சிறுமியை தெருநாய் கடித்தது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், நிலைமையில் முன்னேற்றம்
சாலை விபத்தில் சிறுவன் பலி
பல்லாவரத்தில் சாலை விபத்தில் சிறுவன் பலி சென்னை, ஆக.19: பல்லாவரத்தில் நடந்த சாலை விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. பல்லாவரத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது (15) என்பவர், தனது நண்பர் அப்துல் அகமது (17) ஓட்டிய KTM பைக்கில் பயணம் செய்துள்ளார். அந்த பைக் அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதியது. இந்த விபத்தில் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய
மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி, டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.
சென்னை : புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர் எனப் பெயர் பெற்ற மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி, டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். மருத்துவ துறையில் பல தசாப்தங்களாக சேவை செய்து வந்த ஜெயச்சந்திரன் அவர்களுக்கு துணைவியாக இருந்த வேணி ஜெயச்சந்திரன், சமூகப்பணியிலும், மருத்துவ சேவையிலும் முக்கிய பங்காற்றி வந்தார். இவர் மறைவுக்கு அரசியல், சமூக, மருத்துவ வட்டாரத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. உ. சி,
இந்திய சுதந்திர தினவிழா திருச்சி மேலப்புதூர் புனித ஜீலியானாள் நடுநிலைப்பள்ளி சார்பில் இந்திய சுதந்திர தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் மெர்சி தலைமை தாங்கினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. உ. சி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட
உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சமூக தன்னார்வலர்கள்!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணா நகர் உழவர சந்தை, திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் மற்றும் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் சொர்ண பாரதி வழிகாட்டலில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா

