திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்தி ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பள்ளி மாணவர் விஷ்வா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை
Category: சமீபத்திய செய்திகள்
மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும்” பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் !!!!
காவேரிப்பாக்கம் பாசன கால்வாயை கடக்க பாலம் அமைத்து தர வேண்டி மாணவர்கள் கையில் பாலம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வந்து மனு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பாசன கால்வாய் கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கூறி, பதாகைகளை ஏந்தி எவ்வாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். காவேரிப்பாக்கம்
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு – சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
சென்னை, செப்.27– காலாண்டுத் தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுற்றது. தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் காலாண்டு விடுமுறை, பள்ளிக் கல்வியாண்டு நாட்காட்டியின் படி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறைகளும் சேர்வதால், இந்த ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.
மாநில அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56) இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தனது சிறப்பான சேவையால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு அரசியல், நிர்வாக வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் துறையிலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (செப்டம்பர் 18) மரணமடைந்தார். தொலைக்காட்சியில் நடக்கும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், சில படங்களில்
சிறைத்துறை பணியாளர்கள் – ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரின் பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை : தமிழ்நாடு சிறைத்துறையில் ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள், பணியாளர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு, மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் 2-ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர், 3 ஆண்டுகளுக்குள் தன்னை பணி மாறுதல் செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மனுதாரர் ஒரே மாவட்டத்தின் கீழ் உள்ள சிறைகளில் கடந்த 7
சென்னையில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு
சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை தொடர்ந்து, மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கட்சியினரே தங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாவிட்டால், மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நகரின் அழகியமைப்பை பேணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக
சென்னையில் புதிய நடைமுறை: அபராதம் செலுத்தினால்தான் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு
சென்னை மாநகர காவல்துறை, வாகன ஓட்டிகளுக்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினால்தான், இனி வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும். தற்போது சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதனை வசூல் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை
தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்
தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால். வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில்

