திருப்பத்தூரை அடுத்த காக்கனாம்பாளையத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, செம்மரக் கடத்தல் மன்னர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Author: vnewstamil
புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடி!
துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரச் செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் மரியாதையையும், இந்தியா–ஐ.அ.அ. இடையேயான உறவின்
பழங்குடியின பெண் கண்டெடுத்த 3 வைரங்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில், ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியின பெண் வினிதா கோண்ட் 3 வைரங்களை கண்டெடுத்துள்ளார். வினிதா மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்திருந்த அந்தச் சுரங்கத்தில், 1.48 காரட், 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படவுள்ளன. பல லட்ச ரூபாய்களுக்கு இவை ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வைர
சபரிமலை கோயிலில் தங்கம் எடை குறைவு – உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தில் காப்பர் கலந்துள்ளதால், அதன் எடை குறைந்ததாக புகார் எழுந்துள்ளது. மொத்தம் நான்கரை கிலோ தங்கம் இந்த சிலைகளுக்கு வழங்கப்பட்டதாகும். ஆனால், தற்போது எடை குறைவாக இருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!
லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், லட்சியம் படைப்பாளர் களம் கற்றதையும் பெற்றதையும் மற்றவருக்கு வழங்கி அறிவுச்சுடர் ஏற்ற உள்ள களமாகும். வாழ்வியல் முன்னேற்றம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் லட்சியம் படைப்பாளர் களம் செயல்படுகிறது. அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று
நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது
சென்னையில் நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருபவர் தேவராஜ் (65). நேற்று மதியம் அந்தக் கடைக்கு பர்தா அணிந்த நிலையில் வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் கம்பல் என மொத்தம்
சிறைத்துறை பணியாளர்கள் – ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரின் பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை : தமிழ்நாடு சிறைத்துறையில் ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள், பணியாளர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு, மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் 2-ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர், 3 ஆண்டுகளுக்குள் தன்னை பணி மாறுதல் செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மனுதாரர் ஒரே மாவட்டத்தின் கீழ் உள்ள சிறைகளில் கடந்த 7
அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்தவர்களை வழிப்பறி – போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் கைது
சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்த இளைஞரை வழிப்பறி செய்த இருவர், பின்னர் போலீசாரையே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் ஸ்டீபன் சாலையில் பிரியாணி சாப்பிட வந்திருந்தார். அப்போது, ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா எனும் இருவர் அவரை திடீரென தாக்கி, செல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்து தப்பி சென்றனர். இந்த
சென்னையில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு
சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை தொடர்ந்து, மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கட்சியினரே தங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாவிட்டால், மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நகரின் அழகியமைப்பை பேணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக

