சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ராட்விலர் நாய் தாக்கியதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் 7 வயது சிறுமி, வீட்டு முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்விலர் நாய் அவளைத் தாக்கியது. சிறுமியின் முகத்தில் கொடூரமாக கடித்த அந்த நாயின் வாயை பிளந்து, கஷ்டப்பட்டு தந்தை மகளைக் காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த
Author: vnewstamil
ஆடிப் பெருக்கு திருவிழா: தமிழர்களின் பண்டைய பாரம்பரியம்
சென்னை: தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகையாகக் கருதப்படும் ஆடிப் பெருக்கு இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகை எனக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்டிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் நாளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா என்பதும் சிறப்பம்சமாகும். இந்த நாளில், காவிரி உள்ளிட்ட ஆறுகள்
பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த குணச்சித்திர நடிகர் மதன் பாப் (இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி) காலமானார். இவர் 71 வயதாகும். 1953 அக்டோபர் 19 அன்று பிறந்த மதன் பாப், இசையமைப்பாளராகத் தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நடிகராக மாறி நகைச்சுவை, குணச்சித்திரம், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம்
சென்சார் ரத்து முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சென்சார் ரத்து முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜன், அஞ்சல் தலை சேகரிப்பாளர் முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்சார் ரத்து முத்திரை குறித்து தலைவர் லால்குடி விஜயகுமார் பேசுகையில், தபால் நிலையங்கள் மூலமாக தகவல் பரிமாற்றத்திற்காக கடிதங்களை
விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றம்!
தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு – விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றம்! சென்னை: தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் பல புதிய முகங்களுக்கு இடம் கிடைத்துள்ளதுடன், மூத்த தலைவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தொடர்ந்து ‘தனக்கு விரைவில் கட்சியில் பொறுப்பு வழங்கப்படும்’ என்று கூறி வந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் விஜயதரணிக்கு இம்முறை எந்தவிதப் பதவியும்
மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒப்பந்த காவலாளர் கைது!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஒப்பந்த காவலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரங்கள்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணிடம், அங்கு பணியில் இருந்த ஒப்பந்த காவலாளி வடிவேல், பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, குற்றச்சாட்டில் சிக்கிய காவலாளர் வடிவேலை
முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி
பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி! இன்று தண்டனை அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம் பெங்களூரு: ஜேடிஎஸ் (ஜனதா தள செக்யுலர்) கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இன்று (சனிக்கிழமை) அவருக்கு விதிக்கப்படும் தண்டனையை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. வழக்கின் தொடக்கம்
உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக சாரணர் ஸ்கார்ப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாரத சாரண சாரணியர் இயக்க மணப்பாறை உதவிஆணையர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக
திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு
செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார். கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர்

