சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “K.G. பட்டமளிப்பு விழா” இன்று காலை அப்பள்ளியின் டேக் வள்ளலார் அரங்கத்தில் பள்ளி தாளாளர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா பள்ளி முதல்வர் டி.எல். சுந்தரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்கள் ரைம்ஸ் பாடுதல், கதை சொல்லுதல் மற்றும் இனிய பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் வழங்கி விழாவை சிறப்பாக
Author: vnewstamil
அருள்மிகு திரு விதி அம்மன் ஆலய பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சென்னை: திருவொற்றியூர் பகுதியில் அருள்மிகு திரு விதி அம்மன் ஆலயத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகம் மற்றும் பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர்
70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் சிறப்பு விழா.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சிவகங்கை இணை ஆணையர் மண்டலம் மற்றும் ராமநாதபுரம் உதவி ஆணையர் பிரிவு சார்பில், சட்டமன்ற அறிவிப்பு 2025–2026 (அறிவிப்பு எண்: 28) அடிப்படையில் 70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷிநேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது. திருவாடானை ஆய்வாளர்
தந்தையின் கனவை நினைவாக்கும் மகன் ஹரி பிரபு
சென்னை: வட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வசிக்கும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு தெய்வதிரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் இலவச உணவு மற்றும் இலவச கல்வி வழங்கும் சமூகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. “முதலில் தட்டில் நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், பசியால் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைந்த தெய்வதிரு மனோகரா பூபதியின் சமூக சேவை
ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகே தினசரி அன்னதானம் துவக்கம்.
சென்னை, மார்ச் 6 : சென்னையில் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகில், தெய்வத்திரு ஐயா மனோகர் பூபதி அவர்களின் நினைவாக தொடங்கப்பட்ட மனோகர் பூபதி அறக்கட்டளை சார்பில் இன்று (மார்ச் 6) முதல் தினசரி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
முதல்வரை சந்திக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.க்கு மனு
ராமநாதபுரம்: தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, கிராமத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பெரியோர்கள் இணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக
12 புதிய சிஎன்ஜி பேருந்துகள் துவக்கம்.
ராமேஸ்வரம், மார்ச் 4: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலம் சார்பில், ராமேஸ்வரம் நகராட்சியில் 12 புதிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) பேருந்துகள் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டன. “தூய்மை ராமேஸ்வரம்” என்ற நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய பேருந்து சேவையை, சிவசங்கர், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், கொடி அசைத்து மற்றும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து
மாநகரப் பேருந்தில் நடத்துநர் மீது நடவடிக்கை.
சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதுடன், கட்டணத்தை UPI மூலம் செலுத்த முன்வந்த பயணியிடம் ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்துகொண்டதோடு, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரயில் நிலையத்தில் 41 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.
சென்னை, மார்ச் 3: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 41 திருநங்கைகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சிலரிடம் ஆபாசமாக பேசி சிரமம் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே போலீசார் இணைந்து நிலைய வளாகத்தில் கண்காணிப்பு மேற்கொண்டனர். கண்காணிப்பின் போது, பயணிகளுக்கு இடையூறு
உடனடி நடவடிக்கை. போக்குவரத்து காவலர்கள்.
சென்னை: ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட வினோபா நகர் பகுதியில். பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவால், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில். எச் 5 புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவலர்கள் அரை மணி நேரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவை அப்புறப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

