சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 25 எனவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு
Author: vnewstamil
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரில் மனு.
வாலாஜாபேட்டை அருகே கிராம பகுதியில் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக ஒத்தையடி பாதையில் பயணிக்கும் கிராம பொதுமக்கள். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட லாலிக்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி குறிப்பாக சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கிராமப் பகுதியில் உள்ள ஒத்தையடி பாதையில் தங்களுடைய போக்குவரத்து செய்ய
அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது யார்?
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ அறையில் பணிபுரியும் பெண்மணிகள்,ஆண் குழந்தை பிறந்தால் 1500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். மற்றும் பிரசவ அறையில் சுத்தம் செய்பவர்களுக்கு பணம். பிரசவ அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாற்றுபவர்களுக்கும் பணம். தள்ளுவண்டியில் அமர வைத்து தள்ளுபவர்களுக்கும் பணம். குழந்தை பிறந்தவர்களை பார்க்கச் செல்வதற்கு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பணம், இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும்
அரசு ஸ்டான்லி மருத்துவமனை. குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் நோயாளிகள்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்களுக்கும், தனித்தனியாக பல கட்டிடங்களாக பிரித்து நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், தங்கி மருத்துவம் பார்க்கும், நோயாளிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை என்று நோயாளிகள் கவலைப்படுகின்றனர். பணம் உள்ளவர்கள் தண்ணீர் கேன் வாங்கி குடிப்பதாகவும், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி மருத்துவம் பார்க்கும் இல்லாதவர்கள். துணைக்கு ஆளில்லாத தனி நோயாளிகள் என பலரும், தன்ணீருக்கே கஷ்டப்படுவதாகவும்,
ஆதரவற்ற முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்!
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனி ரத்தினம். பூமிபூஜை. 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம்.
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர்
தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம். எம்.எல்.ஏ பங்கேற்பு.
அரக்கோணம் MRF தொழிற்சாலையில் அரக்கோணம் சுற்றவட்டாரித்தில் இருந்து வந்து பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் MRF தொழிற்சாலை வெளியே மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி BA BL.,MLA கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து MRF நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444…
திமிரி அருகே மகா கும்பாபிஷேக பெருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர்
பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்