226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது – கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல்

226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது – கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை ஜங்ஷன் பகுதியில், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, தலைமையிலான

துணை ஆய்வாளர், சிறப்பு தனிப்படை SBCID ஆய்வாளர் வினோத்,

உடன் சிப்காட் காவல் நிலைய காவலர்கள் குழுவாக தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சுமார் ரூ.1,50,000/- மதிப்புள்ள 226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்:9150223444.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook