மாமன்னர் மருது பாண்டியர்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜை விழா!

மாமன்னர் மருது பாண்டியர்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜை விழா!

ராமநாதபுரம்: மாமன்னர் மருது பாண்டியர்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை முன்பு அழகுற அமைக்கப்பட்ட மேடையில், அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அகமுடையார் சங்கம் மற்றும் நகர் அகமுடையார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அகமுடையார் சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் ராதா, பொருளாளர் வினோத், நகர் தலைவர் ஜோதிராஜ், மாவட்ட இளைஞரணி நிர்வாகி ராம்குமார் மற்றும் சிவா, கார்த்திக், விஷ்ணு, டி. அருண், முரளி, சுதாகரன், கணேசன், ராம்குமார், நவீன், ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும், சூரங்கோட்டை ஊராட்சித் தலைவர் தெய்வநாதன், காந்திமதி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஜே.ஆர்.பி. மணிகண்டன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அகமுடையார் சங்கம் மற்றும் நகர் அகமுடையார் சங்க நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். மேலும், மறைந்த ஹட்டாரி சரவணன் நினைவாகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளர்

M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook