கின்னஸ் சாதனையாளர் செஃப் தாமு காலமானார்! சமையல் கலையின் அடையாளம் மறைந்தது!

கின்னஸ் சாதனையாளர் செஃப் தாமு காலமானார்! சமையல் கலையின் அடையாளம் மறைந்தது!

சென்னை: பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு (72), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 25) காலமானார். அவரது மறைவு சமையல் கலைத் துறையினர், தொலைக்காட்சி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் சாதனை!

கடந்த 2010-ஆம் ஆண்டு, 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் தொடர்ந்து சமையல் செய்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் செஃப் தாமு. அவரது இந்தச் சாதனை இந்திய சமையல் கலைக்கு உலக அளவில் பெருமை சேர்த்தது.

சமையல் கலைக்காகப் பத்மஸ்ரீ விருது!

சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2025-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் இல்லங்கள் தோறும் அறிமுகமான செஃப் தாமு, குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று மக்களின் அன்பைப் பெற்றார். தனது சமையல் திறமை, அனுபவம் மற்றும் தனித்துவமான அணுகுமுறையால் இளம் தலைமுறையினருக்கும் சமையல் கலையின் மீதான ஆர்வத்தை வளர்த்தார்.

சமையல் கலையைத் தனது வாழ்நாள் சாதனையாக மாற்றி, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த செஃப் தாமுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது சாதனைகளும், சமையல் கலைக்கான பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரப்படும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook