ஆம்பூர் அருகே இடத் தகராறு தொடர்பான புகாரில், +2 மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இடத் தகராறு தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் இல்லாத நிலையில் அவரது +2 படிக்கும் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவனை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.10,000 லஞ்சமாக கேட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

