சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் வைத்து பிரதீப் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள் பிரதீப்பை தாக்கி, அவரது தலையை சிதைக்கும் வகையில் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கொலைக்கான முழுமையான காரணம் என்ன? இதில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

