கடலில் ராட்சத அலை: இளம் பெண் பலி – மாணவர் மாயம்.

கடலில் ராட்சத அலை: இளம் பெண் பலி – மாணவர் மாயம்.

சென்னை எண்ணூர் கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி 18 வயதான கிருத்திகா என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆகாஷ் (20) என்ற கல்லூரி மாணவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

தனியார் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக எண்ணூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை காரணமாக கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரும் அலையில் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் கிருத்திகா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆகாஷை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook