சென்னை, ஆக.30–
சென்னை ஓட்டேரி பகுதியில், வீட்டை எழுதி தருமாறு உறவினரிடம் கோரிய வாலிபர், தகராறு காரணமாக அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசிக்கும் வசந்தகுமார் (45), கார் டிரைவர். இவரது வீட்டின் மேல் தளத்தில் உறவினரான விக்னேஷ் (25) வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, மாடி பகுதியில் உள்ள வீட்டை தமக்கே எழுதி தருமாறு விக்னேஷ், வசந்தகுமாரிடம் கோரியுள்ளார். இதனை மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வசந்தகுமாரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தார். இதில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுபற்றி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

