உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

திருச்சியில்

உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

 

ஏப்ரல் 12,13 & 14

ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

 

எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை

சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு , மணி மணி என பணத்தின் பரிமாண வளர்ச்சியினை உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சி மூலம் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலாயம் குளிர்மை அரங்கு இரண்டாம் தளத்தில் ஏப்ரல் 12,13 & 14 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியினை நடத்துகிறது. காசு, பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பணம் பல வடிவமாற்றங்களில் உள்ளது.

கற்காலத்தில் பணம் என்ற வார்த்தை இல்லை. பண்டமாற்று முறை தான் இருந்தது. தற்போது பணமில்லா பரிவர்த்தனை காலத்தில் உள்ளோம்.

நிதி பரிவர்த்தனைகள் பணத்தாள்கள் அல்லது நாணயங்கள் மூலம் நடத்தப்படுவதில்லை , மாறாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. பணமில்லா பரிவர்த்தனைகள் கிரெடிட் கார்டுகள் , டெபிட் கார்டுகள் , மொபைல் பேமெண்ட்கள் மற்றும் நவீன காலங்களில் சாத்தியமாகியுள்ளன. பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் உள்ளன.ஒரு நுகர்வோர் தங்கள் மொபைலில் பே ஆப் மற்றும் ஸ்கொயர் ரீடரைப் பயன்படுத்தி தேநீருக்குக்கூட பணம் செலுத்துகின்றனர்.

இன்றைய காலம்

“பணமில்லா சமூகம்” என்ற வார்த்தையின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது, அதில் ரொக்கம் அதன் டிஜிட்டல் சமமானதாக மாற்றப்படும் ஒரு சமூகத்தை நோக்கி நகர்கிறது. குறிப்பாக உலகின் பல பகுதிகளில் வர்த்தகம் , முதலீடு மற்றும் அன்றாட வாழ்வில் பணத்தை பதிவு செய்தல், நிர்வகித்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் மற்றும் வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் முறைகளின் விரைவான மற்றும் அதிகரித்து வரும் பயன்பாட்டை உலகம் அனுபவித்து வருகிறது. ரொக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை இப்போது மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தற்போதும் பழைய துணிக்கு பாத்திரங்கள் வழங்கும் பண்டமாற்று நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

பழங்காலத்தில் குன்றிமணி, சோழினைக் கூட நாணயங்கலாக பயன் படுத்தி உள்ளனர். இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து முத்திரை காசுகள் புழக்கத்தில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களான சேரர், சோழர், பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி உள்ளிட்டவற்றை முத்திரைக் காசாக அச்சிட்டனர். சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து காசுகளும் அதன் பின் வெளிவந்த காசுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அர்ஜென்டினா, அர்மேனியா, ஆஸ்டிரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பல்கேரியா, பஹ்ரைன், புரூனே, போஸ்னியா , பகாமாஸ், பங்களாதேஷ், பூட்டான், பெல்ஜியம் , பிரேசில், பர்படாஸ், செக்கோஸ்லோவாகியா, கேமன் தீவு, சைனா, கேப் வெர்டி, கனடா, சைப்ரஸ், கோஸ்டோரிகா, செக் குடியரசு , டென்மார்க், கிழக்கு கரீபியன் தீவு, இங்கிலாந்து, ஜெர்மணி, எத்தியோப்பியா, எகிப்து, பல்க் தீவு, பின்லாந்து, பிரான்ஸ், பிஜு தீவு, கேம்பியா, கிரீஸ், ஜெர்சினி, ஹாங்காங், ஹோண்டுராஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், இத்தாலி, ஈரான், ஐஸ்லாந்து, ஜப்பான் , ஜமைக்கா , ஜோர்டான், ஜெர்சி, கஜஹஸ்திஸ்தான், குவைத் , லெபனான், லித்துவேனியா , முராக்கோ, மெக்சிகோ, மாலதீவு, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன், போர்ச்சிகல், பனாமா , பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

நாணயக் கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களில் வில்லியம் IV (1830-1837) , ராணி விட்டோரியா (1834-1901) , எட்வர்டு VII (1901-1910), ஜார்ஜ் V (1911-1936) , ஜார்ஜ் VI (1936- 1947), உள்ளிட்ட ஆண்டுகளில் வெளியான 1/12, 1/2 , 1, 2, 4,8 அணா, பைஸ், காலணா, ஓட்டை ஒரு பைசா, அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், சதுரம், அறுகோண வடிவங்களில் உள்ள நாணயங்கள் காட்சி படுத்தப்படுகின்றன.

குடியரசு இந்தியா பொது பயன்பாடு நாணயங்களும், நினைவார்த்த நாணயங்களும் காட்சிப்படுத்தப் படுகின்றன.

சோமாலியா நாட்டில் வெளியிட்ட கிடார் இசைக்கருவி, கார், விலங்குகள் வடிவிலான நாணயங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், பாண்டியன், லட்சுமி நாராயணன், கமலக்கண்ணன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், இளம்வழுதி, முதுகலை வரலாற்று துறை மாணவர் அரிஸ்டோ உள்ளிட்டோர் தங்களது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்குகிறார்கள்.

பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்கள், பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழம் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கேற்

கிறார்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook