திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக சாரணர் ஸ்கார்ப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாரத சாரண சாரணியர் இயக்க மணப்பாறை உதவிஆணையர் இளம்வழுதி பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்
கொண்டாடப்படுகிறது . உலகெங்கிலும் உள்ள சாரணர்கள் பெருமையுடன் தங்கள் ஸ்கார்ஃப்களை அணிந்து, சாரணர் உணர்வை வெளிப்படுத்துவதும் மற்றும் 1907 ஆம் ஆண்டு பிரவுன்சியா தீவில் முதல் சாரணர் முகாமை நினைவுகூறும் நாளாகும். பிரிட்டிஷ் இராணுவ ஜெனரல் லார்ட் பேடன் பவல் 1907-ல், 20 சிறுவர்களுடன் ஒரு சோதனை முகாமை நடத்தி, சாரணர் இயக்கத்தைத் தொடங்கினார், இந்திய சாரணர் இயக்கம், பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் என அறியப்படுகிறது. இந்த இயக்கம் தேசிய அளவில் இளைஞர்களை சாரணர் பணிகளில் ஈடுபடுத்துகிறது,
சாரணர் இயக்கம், இளைஞர்களை நல்லொழுக்கம், நேர்மை, மற்றும் தொண்டுள்ளம் போன்ற பண்புகளை வளர்க்க உதவுகிறது. நியூசிலாந்து, இங்கிலாந்து,தாய்லாந்து ,ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் சாரணர் சாரணியர் இயக்க பொன்விழா,நூற்றாண்டு விழாவிற்கு பல்வேறு மதிப்புகளில் நினைவார்த்த நாணயங்களை
வெளியிட்டுள்ளது என்றார்.

