பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரி விபத்து: ஒருவர் பலி, பெண் படுகாயம்
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, சாலையில் நடந்து சென்ற நபரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அருகில் சென்ற ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
அதே லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனத்திலும் மோதியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் லாரி ஓட்டுநரை பிடித்து அருகிலிருந்த கம்பத்தில் கட்டிவைத்து போலீசுக்கு ஒப்படைத்தனர்.
அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

