வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்க உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் சண்முகம் இளையராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை, என 24 நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர் அப்போது கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய வார்டுகளில் உள்ள கால்வாய், தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு குறைகளை கூட்டத்தின் வாயிலாக எடுத்துரைத்து பேசினார்கள்
தொடர்ந்து கூட்டத்தில் 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பூக்கடை மோகன் ஆற்காடு தெத்து தெருவில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் தலைவரிடம் தெரிவித்தார் அதன்பின் தலைவர் ஹரிணிதில்லை மற்றும் ஆணையாளர் இளையராணி ஆகியோர் இடத்தை நேரில் உரிய ஆய்வினை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுப்பினரிடம் கூறினார்.
அதேபோல் வாலாஜாபேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் என எந்த கட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூபாய் 25,000 பராமரிப்பு கட்டணம் வழங்க வேண்டுமென கூட்டத்தில் தெரிவித்த போது நகர மன்ற உறுப்பினர்கள் ரூபாய் 5000 மட்டுமே பராமரிப்பு கட்டணம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்ததால் தீர்மானம் வைத்து நிறைவேற்றப்பட்டது..
இதனையடுத்து 24 வார்டு நகர மன்ற உறுப்பினர்களும் தங்கள் வார்டு பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காண வேண்டுமென்றால் நகராட்சி நிர்வாகம் அதற்கான தொகையினை உடனடியாக வழங்கி பணிகளை மும்முறமாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருந்த கடைகள் சம்பந்தமாக நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் ஆணையாளர் துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் முன்னிலையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்..
மேலும் நகரமன்ற கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், பிருந்தா சிலம்பரசன், இர்பான், செந்தில், சுரேஷ், முரளி, ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.9150223444