வாலாஜாபேட்டை அருகே கிராம பகுதியில் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக ஒத்தையடி பாதையில் பயணிக்கும் கிராம பொதுமக்கள். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட லாலிக்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி குறிப்பாக சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கிராமப் பகுதியில் உள்ள ஒத்தையடி பாதையில் தங்களுடைய போக்குவரத்து செய்ய முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கிராமத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அவசர காலத்தில் மருத்துவ உதவி நாட செல்ல எளிதில் பயணிக்க முடியாத வகையில் சாலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலை உடனடியாக அமைத்து தர வேண்டுமென கூறி அப்பகுதி சேர்ந்த ஏராளமான கிராம பெண்கள் வயதானவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து எங்களுடைய கிராமத்திற்கு உரிய சாலை வசதி அமைத்து தர வேண்டுமென தெரிவித்து புகார் மனுவினை வழங்கினார்கள். மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்