வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், மற்றும் கிராம ஊழியர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன. மேற்படி கூட்டத்தில் 1)உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை முடிக்க கால அவகாசம் வேண்டும்
2)அரசு அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ஏற்ற கோரியும். 3)கருணை அடிப்படையில் பணி நியமித்தினை 5% சதவீதத்திலிருந்து 25% ஆக உயர வலியுறுத்தியும். உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமினை புறக்கணித்தல் மற்றும் மாலை 3 மணி முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி கண்டன
கோசங்கள் எழுப்பப்பட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயசேகர் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வாலாஜாவட்ட தலைவர் சசிகுமார்,வட்ட செயலாளர் பார்த்திபன்,வட்ட பொருளாளர் கார்த்திக் கிராம உதவியாளர் சங்க வாலாஜா வட்ட தலைவர் ராஜா நில அளவை துறை தலைமை நில அளவர் உமாபதி உள்பட சுமார் 70 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444

