தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம்
ராணிப்பேட்டை,
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 2025–ம் ஆண்டிற்கான மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேலும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., நேரலையாக கலந்து கொண்டு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ந.செ. சரண்யா தேவி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மழைக்காலத்திற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்வீழ்ச்சி மற்றும் வடிகால் பராமரிப்பு பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் அவசர சேவைத் துறைகளின் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் – 91502 23444



