சென்னை, ஆக.15:
தண்டையார்பேட்டை 38-வது வடக்கு வட்டம், பட்டேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் 60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ். முத்துசெல்வம் தலைமையில், வட்டக் கழகச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஏற்பாட்டில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பால்குடம் சுமந்து உற்சாகமாக பங்கேற்றனர்.
பால்குட ஊர்வலத்தை வடசென்னை வடக்கு-கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். ஊர்வலமாக வந்த பால்குடங்கள் அனைத்தும் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகமாக அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் அனைவரும் அம்மனின் அருளைப் பெற்று ஆனந்தமடைந்தனர்.

