ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே உள்ள கே.ஏ. ரஹீத் என்ற லெதர் தொழிற்சாலையில் துயர சம்பவம் ஒன்று நடைபெற்றது.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தால், வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (47) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக தகவல்.
அதே பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலை உரிமையாளரான கே.ஏ. ரைஸ் அஹமது (44) மற்றும் வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் (38) ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தையடுத்து, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். எம். சுகுமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவரின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிகிச்சையில் உள்ளோரின் நலனையும் கேட்டறிந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📰 மாவட்ட சிறப்பு செய்தியாளர்: ஆர்ஜே. சுரேஷ்
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444

