பானாவரத்தில் கலங்கிய குடிநீர் — பெண்கள் ஆவேச முற்றுகை!
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம்:
பானாவரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கலங்கலாகவும் சகதியுடனும் வழங்கப்பட்டு வந்ததால், மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
யாதவா தெரு, பஜார் தெரு, கம்மார் தெரு, கோகுல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது மக்களின் கோபத்தை தூண்டியது.
இதனால் சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள், குடங்களில் கலங்கிய தண்ணீரை கொண்டு வந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தீவிரமாக போராட்டம் நடத்தினர்.
“இந்த தண்ணீரை நீங்களே குடிப்பீங்களா?” என்று அதிகாரிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பி ஆவேசம் வெளியிட்டனர்.
தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாஷம், பானாவரம் போலீஸ் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போராட்டம், அப்பகுதியில் ஆய்துளை கிணறு அமைத்து நல்ல குடிநீர் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அதிகாரிகள் அளித்ததையடுத்து நிறுத்தப்பட்டது.

📞 செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:
ஆர்ஜே. சுரேஷ் — மாவட்ட சிறப்பு செய்தியாளர்
📱 91502 23444

