புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெறு கோரி ரயில்வே துறை மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் எனவும். அதே போன்று பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என, பல்வேறு கோரிகளை வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில், ரயில்கள் வந்து செல்லும் தண்டவாளத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஒன்றிணைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
மேலும் மறியலில் ஈடுபட உள்ளவர்களை தடுப்பதற்கான நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தயாராக இருந்த அரசு பேருந்துகள் இரண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் ஆர்ப்பாட்டம் சாலை அருகே தயாராக வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் அங்கு கூடிய சுமார் நுற்றுக்கும் அதிகமான ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 94 பேரை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

