உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப்பில், புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டுக்குள் உள்ள செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்த புதிய அப்டேட்டின் மூலம், பல்வேறு மொழிகளில் வரும் செய்திகளை உடனடியாகத் தங்களுக்குப் புரியும் மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

