சென்னை:
ஆர் கே நகர் தொகுதியில் இயங்கி வரும்,நேதாஜி நகர் சுற்று வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அந்த சங்கத்தின் தினசரி கேலண்டர் தலைவர் B.வெங்கடேசன், பொதுச் செயலாளர் S.V.ராஜரத்தினம், பொருளாளர் S.சுயம்பு இவர்கள் தலைமையில். வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னாள் தலைவர் சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களின் திரு உருவ படத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் தலைவர் A.நாராயணன் திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேதாஜி நகர் சுற்று வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தினசரி காலண்டரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் வெளியிட்டார். உடன் நேதாஜி நகர் வியாபாரி சங்கத்தின் உறுப்பினர்கள் மாவட்ட மாநில உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மதியம் கறி விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


