திருப்பதி: திருப்பதி அருகே அலிபிரி–செர்லோபள்ளி சாலையில் கடந்த இரவு அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பைக்கில் சென்ற நபர் மீது திடீரென ஒரு சிறுத்தை பாய்ந்தது.
சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கை சிறுத்தை ஒன்று துரத்தி வந்து தாக்க முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பைக்கில் இருந்த நபர் சிறிது நேரத்துக்குள் தப்பி உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம், பின்புறம் வந்துகொண்டிருந்த ஒரு காரின் டாஷ் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தையின் நடத்தை மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

