- ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அரிய இயற்கை நிகழ்வு ஒன்று சிறப்பாக பதிவாகியுள்ளது. கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி, கடற்கரை பகுதி பசுமை நிற பாசிபடிந்த பாறைகளால் அலங்கரிக்கப்பட்டது.
பவுர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய அமாவாசையிலும், கடல் அலைகள் இல்லாத நிலையில் குளம் போல் அமைதியாகக் காட்சியளித்தது. இதனை பார்க்க வந்த பக்தர்கள், எந்த அச்சமுமின்றி வழக்கம்போல் கடலில் நீராடி, திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.
இயற்கையும் ஆன்மீகமும் ஒன்றாக கலந்த திருச்செந்தூரின் இன்றைய தோற்றம், பக்தர்களின் மனதை மயக்கியது.
![]()

