வால்பாறை அருகே சிறுவனை புலி தாக்கி பரபரப்பு
வால்பாறை அருகே வீரன்குடி மலைப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது. குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ராகுல் என்ற 4 வயது சிறுவனை, புலி ஒன்று திடீரென தாக்கி, அவன் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
சிறுவன் அலறிய சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து கத்தினர். இதனால் புலி அச்சமடைந்து சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு ஓடிச் சென்றது.
தலையில் பலத்த காயமடைந்த ராகுல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

