தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

சென்னை, மார்ச் 16:

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மாதவரம் ரவுண்டானா அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக தொப்பை கணேசன் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்றதுடன் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தொப்பை கணேசன் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் மாதவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook