சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
சென்னை:
தமிழக அரசின் உத்தரவின்படி 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இரவு நேரங்களில் கடைகளை மூடுமாறு மிரட்டுவதாக தேசிய ஓட்டல்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை மீறி கடைகள் மூடப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தியது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசாணை தொடர்பான தகவலை உடனடியாக அறிவிக்க சென்னை காவல் ஆணையருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டது.

