செங்கல்பட்டு:
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மின்வாரிய ஊழியரை அருவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட ரவுடிக் கும்பலை போலீசார் பத்து மணி நேரத்திலேயே பிடித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அம்பேத்கார் நகரில் பைக் ரேஸ் நடந்ததை மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் தட்டி கேட்டிருந்தார். இதனை பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினர்.
சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், போலீசார் ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயன்றபோது, கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.



