கொடுங்கையூரில் K.G. பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கொடுங்கையூரில் K.G. பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “K.G. பட்டமளிப்பு விழா” இன்று காலை அப்பள்ளியின் டேக் வள்ளலார் அரங்கத்தில் பள்ளி தாளாளர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழா பள்ளி முதல்வர் டி.எல். சுந்தரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்கள் ரைம்ஸ் பாடுதல், கதை சொல்லுதல் மற்றும் இனிய பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் வழங்கி விழாவை சிறப்பாக தொடங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியின் ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் டாக்டர் ஆ. மோனிகா அவர்கள் கலந்து கொண்டு K.G. மாணவர்களுக்கு பட்டமளித்து சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாணவர்களிடம் உற்சாக உரையாற்றி அவர்களை பாராட்டினார்.

மேலும் இந்த நிகழ்வில் துணை முதல்வர் எஸ்.கே. பகவத் சிந்துஜா, தலைமை ஆசிரியர் பி. செல்வி, வகுப்பு ஆசிரியர்கள் பி. ஹரிதா, ஜி. வினோதா மற்றும் பிற ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook