சென்னை: திருவொற்றியூர் பகுதியில் அருள்மிகு திரு விதி அம்மன் ஆலயத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகம் மற்றும் பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் சி. பாஸ்கர், எஸ். சரவணன், கௌரவ தலைவர் எஸ். செந்தில், பொதுச்செயலாளர் கே. அண்ணாதுரை, பொருளாளர் சி. சந்தானம், துணைத்தலைவர் டி. மூர்த்தி, துணைத்தலைவர் எ. மணிவண்ணன், துணைத்தலைவர் பிரதீஷ் குமார், துணைச் செயலாளர் எம். அஜித், துணைச் செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

