ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம், மார்ச் 26
விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மற்றும் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன், பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், ராமநாதபுரம் நகரக் கழக செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் விஜிபி. ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் சரவணன், இளையராஜா நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
சிறப்பு கண்டன உரையை மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். “ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்”, “பதில் சொல் முதலமைச்சரே”, “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன் செய்திருந்தனர்.
– ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
M.N. அன்வர் அலி

