முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு.

முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.

 

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook