ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்து திமிரி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 36) என்பவர் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து திமிரி செல்வதற்காக பாரதி, தனியார் பேருந்தில் பயணம் செய்த பெருமாள் திமிரி செல்வதற்கு பஸ்ஸில் நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் பஸ் திமிரி போகாது ஆரணி மட்டும் போகும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெருமாள் என்பவர் இந்த பேருந்து திமிரி வழியாக செல்கின்றன என்னை திமிரியில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார் வாய் தகரலில் ஈடுபட்ட நடத்துனர் பெருமாள் என்பவர் ஒரு மாற்றுத் திறனாளி என்று தெரிந்தும் அடித்து கீழே தள்ளி உள்ளனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது துரை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பெருமாள் கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்

