எந்த ஒரு தவறும் செய்யாத ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.
வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டல் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது-விவகாரம்பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.அங்கு ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பிரபு இவர் அங்குள்ள கிருஷ்ணாபுரத்தில் தங்கி தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் தேர்வின் போது ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய 6 மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பிரபு பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையம் என் 1098 புகார் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 24-ஆம் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது
புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று பிரபுவை கைது செய்தனர்.மேலும் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஆசிரியர் தவறு செய்யவில்லை அவர் மீது தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆலங்காயம்- ஜமுனாமத்தூர் செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருந்த போதிலும் அவர்கள் கலந்து செல்லாத நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி மற்றும் வாணியம்பாடி தாசில்தார் உமா ரம்யா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.