தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்

தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்

சென்னை:

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

முகாம்களில் நடைபெறும் Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்திற்கும் உடனடியாக முடிவுகள் SMS மூலம் பயனாளிகளுக்கு அனுப்பப்படவுள்ளன. மேலும் பரிசோதனை முடிவுகள் அடங்கிய தனிப்பட்ட மருத்துவக் கோப்புகளும் (folders) வழங்கப்படும்.

“உங்கள் குடும்பத்தின் நலன், அரசின் பொறுப்பு” என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook