ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் குமரமுருகன் சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்கார செய்யப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.

