ராணிப்பேட்டை: “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலைய விருது” வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, சென்னையில் நடைபெற்ற விழாவில் காவல்துறை தலைமை இயக்குநரிடமிருந்து பெற்றார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால், ஆய்வாளர் சாலமோன் ராஜாவை வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் கலந்து கொண்டார். செய்தி:ஆர்.ஜே.சுரேஷ்

