உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம்
Tag: Udhayanidhi Stalin
பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழக முதல்வர்.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச்.1 தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர். பிறந்தநாள் நிகழ்வு.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.