சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச்.1 தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து