ராணிப்பேட்டை, 8 வது ஊதியக்குழு அறிக்கையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு எந்தவிதமான பலனும் வழங்கப்படாமல் வஞ்சிக்கும் மசோதா விவாதம் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, ரத்து செய்யவேண்டி தேசிய ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.பி) சார்பில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.சுந்தரேசன் தலைமையில் இராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக எம்.ஏகாம்பரம் நன்றி கூறி முடித்து வைத்தார்.
Tag: Awareness
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் கருத்து கேட்பு கூட்டம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு. கட்டுமான தொழிலாளர்கள் குறைகள் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும், கருத்து கேட்பு கூட்டத்தில் வாரிய தலைவர் உறுதி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைகள் ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்
காத்திருப்பு போராட்டம். கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, நெமிலி, ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை
பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள்
காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் , விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700 மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
திடீர் ஆய்வு. அறிவுரை. வாகன விதிகளை பின்பற்ற வேண்டும்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்,
ஆதரவற்ற முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்!
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
மும்மொழி, புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!
வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்
பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Journalists attention-grabbing demonstration. பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிவுறுத்தல் படி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு

