ராணிப்பேட்டை மாவட்ட அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவிவருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடர்ச்சி மலைகளும்,மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடர் மலைக் குன்றுகளுமே உள்ளது.இதில் கருங்கல் பாறைகள்,படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான

