கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது. ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்