ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.