திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்”

