சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அறிக்கை ஒன்றை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பாபு தலைமையில் 10 துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நடைபாதை கடைகள், நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் அகற்றப்பட்டது. சில கடைகளுக்கு 500 ரூபாய் விதம் அபராதமும் போடப்பட்டது.